Aug 27, 2009

வலி..........!

** தலைப்பே வலிக்கிறதா...?
அனுபவிபவனுக்குத்தான் தெரியும்
வலியின் வலி எப்படி என்று..
அனுபவித்தவன் சொல்கிறேன்.. கேளுங்கள்..
இறைவனிடம் ஓர் வேண்டுகோள்...
நான் பிறக்கும்போது எனது அன்னைக்கு வலிகொடுக்காமல்
பிறந்திருக்கக்கூடதா என்று..
வலி மனதை ரனமாக்குகின்றது..
பின்னர் குனமாக்குகின்றது...
குழந்தையாய் அடிபட்டால் வரும் வலி..
மாணவனாய் ஆசிரியரிடம் அடிவாங்கும் வலி..
பருவ இளைஞனாய் காதலி பிரியும் வலி ..
முதிர் இளைஞனாய் தோல்வியை சந்திக்கும் வலி..
தகப்பனாய் தன் குடும்பத்தை பராமரிக்க இயலாத வலி...
கிழவனாய் தன் இன்னொரு பாதியை இழக்கும் வலி..
விதங்கள் வேறு..
ஆனால் வலி ஒன்று..
வலி, உளி போன்றது..
வாழ்கையை செதுக்குகின்றது..
உளி இல்லையெனில் சிலை இல்லை..
சிலை ஆகாத கல் போற்றப்படுவதில்லை..
வலிக்கின்றதா..?

நம்பிக்கை...!

** புண்பட்ட நெஞ்சுக்கு மாமருந்து..
தோழா...!
நம்பிக்கையை இழந்து விடாதே...
அதில் தான் வாழ்க்கை இருக்கின்றது.
எதில் இல்லை நம்பிக்கை..?
இரவு இருந்தால் பகல் இருப்பதில்லையா..?
தேனைப்போன்ற இனிமையும் இரும்பைப்போன்ற வலிமையும்
உடையதாட நம்பிக்கை..
நம்பிக்கையும் இறைவனும் ஒன்று தான்.
உணரத்தான் முடியுமே தவிர
கண்ணெதிரே தோன்றாது.. ஆனால் இரண்டுமே
எல்லா இடங்களிலும் இருக்கின்றன...
தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி..
தடுமாறாமல் ஏற நம்பிக்கைதான் உனக்கு தடி.
தோல்வி கண்டு துவண்டு விடாதே....!
அன்னை உனக்கு புகட்டுவது பால் மட்டுமல்ல,
நீ வளர்ந்து விடுவாய் என்ற நம்பிக்கையும் தான்..
நம்பிக்கையோடு உழை..!
உழைப்பின் வேர்களுக்கு நம்பிக்கை நீரூற்று.
இனிமையான அதன் கனிகள் நீ சுவைக்க காத்துக்கொண்டிருக்கின்றன...

- வெள்ளை தமிழன்


நம்முள் காந்தி ....!

** மனத்திலே இருக்க வேண்டிய காந்தியம்
இன்றோ...!
பணத்திலே இருக்கின்றது...
சகிப்புத்தன்மை அதிகமோ அவருக்கு..?
லஞ்சம் கொடுக்கும்போதும் சிரித்திக்கொண்டே செல்கிறார்..
காந்தியம் பயில சினிமா செல்லும் அவலநிலை இன்று...
நான் காந்தியத்தை கற்பிக்க வரவில்லை.
அதை உங்களுடன் கற்க வந்துள்ளேன்..
நல்ல மக்களின் அடையாளம் தந்தையின் வழியே நடப்பது..
அவர் தேசத்தந்தையாக இருந்தாலும் சரி...!
காந்தியம் போற்றுவோம்...!
அதற்குள் காந்தமாய் மக்களை இழுப்போம்..!

- வெள்ளை தமிழன்..

சிறிய கவிதைகள் ( தொடர்ச்சி )

** பால் :
மூன்று வயது.
குடுமி வைத்தாள்.
பூ சூடி விட்டாள்.
வளையலையும் உடுத்தினாள்.
மகாலக்ஷ்மி என்றாள் அன்னை சிரித்துக்கொண்டே,
லட்சுமணன் என்ற நான் அழுவதை பார்த்து.

பதிமூன்று வயது.
சடை வளர்த்தேன்.
பொட்டு வைத்தேன்.
பூவும் சூடினேன்.
வளையலையும் உடுத்தினேன்.
மகாலக்ஷ்மி என்றேன் என் அன்னையை பார்த்து சிரித்துக்கொண்டே.
அவள் அழுது கொண்டிருக்கின்றாள்.


** மாமியார் மருமகள் கொடுமையை
மாமியார் மருமகள் இருவருமே
சேர்ந்து பார்க்கும் கொடுமை தான் மெகா தொடர்..

** " சுதந்திரம் வேண்டும்" என்று கதறியது,
சுதந்திர மற்றும் குடியரசு தினத்தன்று மட்டும்
சுதந்திரமாய் பறக்கும் நம் தேசிய கொடி..


** தாடி வரவில்லையே என்று கவலைகொண்டேன்..
அதனால் தான் முத்த உரத்தை விதைத்துவிட்டு சென்றுவிட்டாயோ....?

- வெள்ளை தமிழன்..

Aug 12, 2009

எனது கிறுக்கல்கள் ....!

* ' ரௌத்ரம் பழகு' என்றான் பாரதி..
தேவை இல்லை ..
கதகதப்பான வெதுவெதுப்பான கருவறையை
உதைத்து, கிழித்து
சொதசொதப்பாய் ரத்த சதையாய் வந்து விழுந்த நாம்
ரௌத்ரம் பழகதேவை இல்லை..

* இப்பொழுது நினைத்தாலும் என் உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை வருகின்றது.
" அச்சமில்லை அச்சமில்லை. அச்சம் என்பதில்லையே ...!" என்ற வரிகளை
அச்சத்துடன் மேடையில் பேசியதை நினைத்து...

* ஆடி தள்ளுபடியில் ஆடைகள் எடுக்க கடைவீதிக்கு சென்றிருந்த பொழுது அவளை கண்டேன்..
கயல்விழி கண்களும், பட்டு போன்ற கன்னங்களுடன் வீற்றிருந்தாள் அவள்..
முட்டி மோதும் முன்னழகு, பிடரியை அலங்கரிக்கும் பின்னழகு, பேரழகு..
அவள் முத்து போன்ற விரல்களால் தன்னுடைய இடுப்பினை தாங்கி பிடிக்கும் போது அனைவர் பார்வையும் அவள் மீது..
இத்தனை அழகும், நளினமும் இருந்தும் உயிரற்றவலாய் இருந்தாள்..
ஜவுளிக்கடையில் பொம்மையாய்....


- வெள்ளை தமிழன்..

**VISIT COUNTER**