Aug 27, 2009

சிறிய கவிதைகள் ( தொடர்ச்சி )

** பால் :
மூன்று வயது.
குடுமி வைத்தாள்.
பூ சூடி விட்டாள்.
வளையலையும் உடுத்தினாள்.
மகாலக்ஷ்மி என்றாள் அன்னை சிரித்துக்கொண்டே,
லட்சுமணன் என்ற நான் அழுவதை பார்த்து.

பதிமூன்று வயது.
சடை வளர்த்தேன்.
பொட்டு வைத்தேன்.
பூவும் சூடினேன்.
வளையலையும் உடுத்தினேன்.
மகாலக்ஷ்மி என்றேன் என் அன்னையை பார்த்து சிரித்துக்கொண்டே.
அவள் அழுது கொண்டிருக்கின்றாள்.


** மாமியார் மருமகள் கொடுமையை
மாமியார் மருமகள் இருவருமே
சேர்ந்து பார்க்கும் கொடுமை தான் மெகா தொடர்..

** " சுதந்திரம் வேண்டும்" என்று கதறியது,
சுதந்திர மற்றும் குடியரசு தினத்தன்று மட்டும்
சுதந்திரமாய் பறக்கும் நம் தேசிய கொடி..


** தாடி வரவில்லையே என்று கவலைகொண்டேன்..
அதனால் தான் முத்த உரத்தை விதைத்துவிட்டு சென்றுவிட்டாயோ....?

- வெள்ளை தமிழன்..

No comments:

Post a Comment

**VISIT COUNTER**