என் முதல் காதல் அவள் மீது.
என் இதயத்தில் கால் பதித்த அவளை
காலங்கள் கரைய,
கவிதைகள் உருக,
காதலித்தேன்.
ரசிக்க ரசிக்க அவளின் உருவமும்,
ருசிக்க ருசிக்க அவளின் குரலும் இருந்தன.
கண்களால் அணைத்துக்கொண்டேன்.
செவிகளால் அள்ளி அள்ளி பருகினேன்.
சோலைவனமாய் இருந்த என் காதலை தகர்த்தான்
பாலைவனத்தை சேர்ந்த பாமுகன்.
அவன் காதலை ஏற்று நீ என் காதலை கொலை செய்தாய்.
வற்றாத என் காதல் உன் மனதில் வடிக்கப்பட்ட காதலாய் மாறியது.
என் உண்மைக்காதலை இவ்வுலகம் உவமையாக்கிக் கொண்டது.
இரவுகள் கழிந்தன, விடியல்கள் தொடர்ந்தன.
என் இருண்ட, இருட்டடிக்கப்பட்ட காதல் மட்டும் அப்படியே இருந்தது.
" நான் உன்னை காதலிக்கவில்லை" என்ற உன் வார்த்தைகள் என் மனதை
ரணமாக்கினாலும், உனக்காக அதையும் காதலுடன் ஏற்றுக்கொண்டேன்.
என் சோலைவனத்தில் உள்ள காதல் பூக்களெல்லாம் கருகி, தனி ஒரு மரமாய்,
நடைப்பிணமாய் நான் வளர்ந்து கொண்டிருக்கின்றேன்.
உயிரின் கடைசி துளி உள்ள வரை உன் மீதுள்ள என் காதல் வாழும், உன் வருகைக்காக மிச்சமிருக்கும்.
- வெ. தமிழன்
No comments:
Post a Comment