* இனம் புரியாத ஈர்ப்பு.
மனம் புரிந்த நட்பு.
நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லை என்று
மனம் உவந்து சொன்ன வார்த்தைகள்,
வாரி இறைத்து வந்த கவிதைகள்.
பேசிக்கொண்டே விடியும் இரவுகள்.
உரசிக்கொண்டே பிரியும் சந்திப்புகள்.
கற்பனை குழந்தைகளும், அதற்கு
ஒப்பனை பெற்றோர்களாக நாமும்.
உற்சாகமான சிரிப்புகளும், மரணத்தை விட
கொடுமையான விசும்பல்களும்,
அனல் கக்கிய எனது கோபங்களும், அதனை
தணிக்கும் உனது ' கொஞ்சல்களும் கெஞ்சல்களும்' ,
பிரிவு என்று வந்த போதும், முறிவு என்ற ஒன்றை
நான் ஏற்படுத்திய போதும்,
மரணத்தின் வாயில் வரை நீ சென்று வந்த போதும்
இறக்காத என் காதல்,
என்னை விரும்பும் ஓர் உயிர்காக என்
நாட்குறிப்பில் புதைந்து விட்டது. மன்னித்துவிடு.
இப்படிக்கு உன் முதல் காதலி..
- வெ. தமிழன்
No comments:
Post a Comment