Feb 13, 2010

என் காதலி...!

மலரும் மொட்டு.
பிறந்த குழந்தையின் நிறம் அவளின் மனம்.
அதிகாலை சூரியன்.
நடுநிசி நிசப்தம்.
உருகும் ஐஸ்கிரீம்.
நுனிநாக்கின் தித்திப்பு.
அன்னையின் அன்பு.
தந்தையின் கண்டிப்பு.
நண்பனின் நட்பு.
எதிரியின் துளி இரக்கம்.
உயிர்குடிக்கும் போதை, இந்த பேதை.
அட்டகாசமான சிரிப்பு.
அடக்கி வாசிப்பது அவளின் இயல்பு.
பிடிவாத பேய். என்றும் மடியாத சேய்.
இவைகள் அனைத்தும் ஒன்றாக, இவைகளை மிஞ்சிய சாதுர்யமான தந்திரக்காரி.
என் மனதை கொள்ளைக்கொண்ட அழகிய கொள்ளைக்காரி.
என் காதலி..

- வெ. தமிழன்

1 comment:

**VISIT COUNTER**