Dec 13, 2010

சிக்னல் காதல்...

கையருகே நிலா என்பார்கள்..
அன்று தான் நேரில் கண்டேன்..
சுட்டெரிக்கும் சூரியனை விட
பிரகாசமாய், ஒரு நிமிட பிரபஞ்சமாய் இருந்தால் அவள்..
மணித்துளிகள் கரைய கரைய
வியர்வைத்துளிகளை துடைத்து
அருகில் இருந்த துளி மழையில் நனைந்து கொண்டிருந்தேன்..
அவளின் கடைக்கண் பார்வையில்
வழியில் வந்த தடைக்கல் கூட எனக்கு
தலையணை போல் சுகம் தந்தது..
பச்சை விளக்கு எரிந்தும்
பசையாய் அவளின் முகம் என் மனதில் ஒட்டிக்கொண்டிருந்தது..
சிக்னல் காதல் சிக்கனமாய் முடிந்தது...


- வெ. தமிழன்.

1 comment:

  1. nice words and you still maintain the punch... great work javith

    by
    madhav

    ReplyDelete

**VISIT COUNTER**