கையருகே நிலா என்பார்கள்..
அன்று தான் நேரில் கண்டேன்..
சுட்டெரிக்கும் சூரியனை விட
பிரகாசமாய், ஒரு நிமிட பிரபஞ்சமாய் இருந்தால் அவள்..
மணித்துளிகள் கரைய கரைய
வியர்வைத்துளிகளை துடைத்து
அருகில் இருந்த துளி மழையில் நனைந்து கொண்டிருந்தேன்..
அவளின் கடைக்கண் பார்வையில்
வழியில் வந்த தடைக்கல் கூட எனக்கு
தலையணை போல் சுகம் தந்தது..
பச்சை விளக்கு எரிந்தும்
பசையாய் அவளின் முகம் என் மனதில் ஒட்டிக்கொண்டிருந்தது..
சிக்னல் காதல் சிக்கனமாய் முடிந்தது...
- வெ. தமிழன்.
Dec 13, 2010
குழந்தை...
ஓரடி உயர விந்தை . .
இதற்கும் நீர் வரும்.. கண்களில் அல்ல..
வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும்...
இரண்டு நிமிட காம விளையாட்டின் ஆச்சர்யம் இந்த ஜந்து..
கவலைகளில்லாத சதைப்பந்து..
எப்போதும் கைககளை மூடிக்கொண்டிருப்பதேன்...?
அனைவர் மனதையும் கவர்ந்த காந்தம் அல்லவே அது...
விடலை முதல் முதுமை மக்களை நண்பனாய் மாற்றும் திறமைசாலி..
அஞ்ச நெஞ்சனையையே மார்பில் எட்டி உதிக்கும் பலசாலி...

Subscribe to:
Posts (Atom)