Feb 20, 2010

என் நிலை.. நீ இல்லாததினால்...

விழிகள் உறங்கும் நேரம் இது...
உன் நினைவுகள் துயில் எழும் தருணம் இது..
என் இமைகளை நான் மூடினால், என் மனதினுள் நீ உன் இமைகளை திறக்கின்றாய்..
காதல் ததும்பும் பாடல்கள் நான் கேட்டாலும், உன் வார்த்தைகளே என் காதினுள்
காதலாய் ரீங்காரமிடுகின்றன..
சில நேரம் சிரிக்கின்றேன்... மனதினுள் நீ வாழ்வதால் வரும் சந்தோஷம் அந்த சிரிப்பு..
சில நேரம் அழுகின்றேன்.. மனதினுள் மட்டுமே நீ என்னுடன் இருப்பதால் வரும் சோகம் அந்த அழுகை..
கண்கள் மூடினால் கண்ணீர் என்னை அணைக்கின்றதே...
என்னுடன் வந்துவிடு..
என் நண்பர்களுக்கு தோழியாக..
என் பெற்றோருக்கு மருமகளாக..
என் தங்கைக்கு அண்ணியாக..
எனக்கு மனைவியாக..
என்றும் மறைந்திடாத காதலுடன் இருப்பேன், உன் கணவனாக...

- வெ. தமிழன்

No comments:

Post a Comment

**VISIT COUNTER**