Feb 20, 2010

முதல் காதல் பரிசு...! முதல் அன்பளிப்பு..!

அவன் சம்பாதித்த முதல் நூறு ரூபாயில் தன் காதலிக்கு வாங்கிக்கொடுத்த முதல் அன்பளிப்பு, பூக்கள்... ஒரு சிகப்பு ரோஜா, ஒரு செயற்கையான ரோஜா மற்றும் சில பூக்கள்.. "ஏன் இதை வாங்கினாய்?" என்று அவள் அவனிடம் வினவியபோது, அவன் பதிலை கீழே உள்ள கவிதையாய் எழுதி அவளிடம் கொடுத்தான் .. அதை அவள் படித்த பிறகு அவன் மேல் கொண்டுள்ள காதலையும், அவளின் ஏக்கங்களையும் அன்று நேரில் அவன் கண்டான் ... :) இதோ அந்த கவிதை..


என் முதல் சம்பாத்தியம்..
முத்தாக நீ கிடைத்தது எனது பாக்கியம்..
உனக்கென்ன வாங்குவது என்று என் மனதினுள் கடும் போராட்டம்..
பிறகோ பெரும் கொண்டாட்டம்..
உனக்காக இந்த மலர்களை வாங்கினேன்..
சிகப்பு ரோஜா நான்... செயற்கையான ரோஜா நீ..
நம் காதலை உணர்த்துவது மிச்சமுள்ள பூக்கள்..
நான் வாடினாலும் நீ வாடாமல் இருப்பதற்காகவே வாங்கினேன் உனக்காக
செயற்கையான பூவை..
என் மணம்(காதல்) உன் மேல் படர்ந்து உன்னையும் மணக்கச்செய்யும் (காதலிக்கச்செய்யும்)..
முகர்ந்துக்கொள் ... உன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துக்கொள்..
அம்மகிழ்ச்சி என்றும் வாடாமல்...

- வெ. தமிழன்

4 comments:

  1. nice poem...
    anubavithu elithinayo???
    முகர்ந்துக்கொல் illa முகர்ந்துக்கொள்..
    (may be correct)

    ReplyDelete
  2. @thirukumar
    you are right sir... correction done.. thanks.. anubavangal than pesa vaikkum... en vishayathil athu kelvikkuri,,, ;)

    ReplyDelete
  3. dei nanba... brother kadaila tea kuduchukittu iruntha unakkul ipadi oru kavingna! kalakure da. keep it up(!)

    ReplyDelete

**VISIT COUNTER**