Mar 8, 2010
Feb 20, 2010
முதல் காதல் பரிசு...! முதல் அன்பளிப்பு..!
அவன் சம்பாதித்த முதல் நூறு ரூபாயில் தன் காதலிக்கு வாங்கிக்கொடுத்த முதல் அன்பளிப்பு, பூக்கள்... ஒரு சிகப்பு ரோஜா, ஒரு செயற்கையான ரோஜா மற்றும் சில பூக்கள்.. "ஏன் இதை வாங்கினாய்?" என்று அவள் அவனிடம் வினவியபோது, அவன் பதிலை கீழே உள்ள கவிதையாய் எழுதி அவளிடம் கொடுத்தான் .. அதை அவள் படித்த பிறகு அவன் மேல் கொண்டுள்ள காதலையும், அவளின் ஏக்கங்களையும் அன்று நேரில் அவன் கண்டான் ... :) இதோ அந்த கவிதை..
என் முதல் சம்பாத்தியம்..
முத்தாக நீ கிடைத்தது எனது பாக்கியம்..
உனக்கென்ன வாங்குவது என்று என் மனதினுள் கடும் போராட்டம்..
பிறகோ பெரும் கொண்டாட்டம்..
உனக்காக இந்த மலர்களை வாங்கினேன்..
சிகப்பு ரோஜா நான்... செயற்கையான ரோஜா நீ..
நம் காதலை உணர்த்துவது மிச்சமுள்ள பூக்கள்..
நான் வாடினாலும் நீ வாடாமல் இருப்பதற்காகவே வாங்கினேன் உனக்காக
செயற்கையான பூவை..
என் மணம்(காதல்) உன் மேல் படர்ந்து உன்னையும் மணக்கச்செய்யும் (காதலிக்கச்செய்யும்)..
முகர்ந்துக்கொள் ... உன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துக்கொள்..
அம்மகிழ்ச்சி என்றும் வாடாமல்...
- வெ. தமிழன்

என் நிலை.. நீ இல்லாததினால்...
விழிகள் உறங்கும் நேரம் இது...
உன் நினைவுகள் துயில் எழும் தருணம் இது..
என் இமைகளை நான் மூடினால், என் மனதினுள் நீ உன் இமைகளை திறக்கின்றாய்..
காதல் ததும்பும் பாடல்கள் நான் கேட்டாலும், உன் வார்த்தைகளே என் காதினுள்
காதலாய் ரீங்காரமிடுகின்றன..
சில நேரம் சிரிக்கின்றேன்... மனதினுள் நீ வாழ்வதால் வரும் சந்தோஷம் அந்த சிரிப்பு..
சில நேரம் அழுகின்றேன்.. மனதினுள் மட்டுமே நீ என்னுடன் இருப்பதால் வரும் சோகம் அந்த அழுகை..
கண்கள் மூடினால் கண்ணீர் என்னை அணைக்கின்றதே...
என்னுடன் வந்துவிடு..
என் நண்பர்களுக்கு தோழியாக..
என் பெற்றோருக்கு மருமகளாக..
என் தங்கைக்கு அண்ணியாக..
எனக்கு மனைவியாக..
என்றும் மறைந்திடாத காதலுடன் இருப்பேன், உன் கணவனாக...

கனவான காதல்...!
என் காதல் ஒரு கனவாக முடிந்தது..
அவள் கை பிடித்து என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்தேன்..
இன்று அவள் இல்லாமல் என் வாழ்க்கை நகரவில்லை..
நினைத்தாலே நெஞ்சம் வெடித்து அழுகை வரும்..
அவளையும், அவளின் காதலையும், அவளின் நினைவுகளையும்
விட்டுக்கொடுக்கமுடியாதவனாய், கண்ணீர் சிந்துகின்றேன்..
அக்கன்நீரும் அவள் நினைவாக வருகின்றதால் அதை கீழே சிந்தாமல்
துடைத்துகொள்கிறேன்..
அவள் என்னுள்ளே இருக்க வேண்டும் என்பதற்காக...

Feb 13, 2010
காதல் ஸ்பெஷல்...
* காதலிக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்,
காதல் அரும்ப ஒரே காரணம் நீ தான்...
* உன்னை வர்ணித்தால்
அது கவிதையல்ல.. கட்டுரை.
கட்டுரையை கவிதையாக்கினேன்
ஒற்றை வரியில்..
என் அன்பிற்குரிய காதலியே...
* உனது செருப்பு என்னிடம் கதறியது..
உனது எடை குறைந்து கொண்டே போகிறதாம்.
"அதற்கு ஏன் வருத்தப்படுகிறாய்?" என்றேன்..
உனது சுகமான சுமையை அதனால் மறக்க முடியவில்லையாம்..
* "மறக்க வேண்டும் அவளை" என்று நினைக்கின்றேன்..
அனுதினமும்...

Subscribe to:
Posts (Atom)