கண்ணயர்கிறேன்.. துயில முடியவில்லை..
நிஜம் போன்ற மனிதர்கள் நிழல் போல மறைந்தனர்..
ஆசை படுகிறேன் மறுபடியும், குழந்தையாய் மாற..
நிராசையால் குழந்தை போல அழுகிறேன்...
கனவுகள் நிறைந்த என் மனது இன்று வெறுமை நிறைந்து உள்ளது..
சிரிக்கின்றேன், மகிழ்ச்சி இல்லாமல்..
நான் செய்தது பிழை.. ஆனேன் அன்பில் ஏழை..
என் ஆசைகள் அனைத்தும் மனதில் புதைத்து, கண்ணீரால் நீரிட்டேன்..
விழைந்தது முளை..
இது பூக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்றும் நீரிடுகிறேன்...