* உன்னை காதலிப்பதால் எனக்கு எதிரிகள் ஏராளம்..
நேரம்.
உன்னை பார்க்க வரும்போது அதிகம் செலவாவது..
உன்னை பார்த்துக்கொண்டிருக்கையில் விரைந்து கரைவது...
எனது இதயம்.
இவ்வளவு நாட்களாக எனக்காக துடித்துக் கொண்டிருக்கிறது என்று
நினைத்தேன்.
உன்னை பார்க்கும் வரை..
எனது மனம்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால் உனக்கென்று ஒன்று வந்தால் எதைப்பற்றியும் கவலைப்படாத
மாசில்லா மனம்..
இந்த எதிரிகளை விட்டு என்னால் இருக்கமுடியாது.. இவைகள் உன்னைச்
சார்ந்தே என்னை வாழ வைக்கும் பாச எதிரிகள்..
* " இவ்வுலகத்தில் எது ரொம்ப பிடிக்கும்? " என்று வினவினாய்.
" குழந்தையின் சிரிப்பு - அது உன்னை பார்த்து சிரிக்கும் போது..
மழைத்துளி - உன்னுடன் சேர்ந்து நனையும் போது ..
கடற்கரை - உன் கைகோர்த்து நடக்கும்போது...
இரவு - உன்னுடன் இருக்கும்போது..
வியர்வை - அது உன் பட்டுப்போன்ற மேனியில் இருந்து வரும்போது..
பூக்கள் - அதை நீ நுகரும்போது..
நாய்க்குட்டி - அதை நீ கொஞ்சும்போது..
நாணமும் கோபமும் - அதை நீ வெளிப்படுத்தும் போது..
முத்தம் - அதை நீ கொடுக்கும்போது..
தேவதை - அவள் நீயாக இருக்கும்போது..
தூக்கம் - உன் மடியினில் சாயும்போது..
மரணம் - நீ என் வாழ்வில் இல்லாதபோது..
காதல் - நீ என் வாழ்வில் வந்தபோது.. " என்று சொன்னேன்..
அள்ளி அனைத்து முத்தமிட்டாய் என்னை..
என் வாழ்வின் மோட்சத்தை நான் அடைந்தேன்..
* அடிமைத்தனத்தை நான் ஆதரிப்பேன்..
உன் காதல் அடிமையாக இருக்கச்சொன்னால்..
* மார்பில் சாய்ந்து இவ்வுலக துயரங்களை துயர்ந்து கனா காணும் குழந்தை நான்.
எனது சேய் நீ..
அன்பென்னும் காதலை உண்டு மகிழும் இரவல் நான்.. இறைந்து கொடுப்பவள்
நீ..
எனது சுவாசமாய் நீ.. சுவாசம் வெளியேறினால் பிணமாய் நான்..
எனது தலைவன் நீ.. தலைவனை சார்ந்து வாழும் மக்களாய் நான்..
எனது கோபம் நீ..
மகிழ்ச்சியும் நீ..
அழுகையும் நீ..
பசியும் நீ.. உணவும் நீ..
உள்ளமும் நீ.. உள்ளத்திலும் நீ..
என் கூச்சம் நீ.. வெட்கம் நீ..
ஆக்கம் நீ.. ஆயுளும் நீ..
என் ஆண்மையை ஆழ்பவள் நீ.. என்னுள் இருக்கும் பெண்மையும் நீ..
எனது கவியும் நீ.. கவிதையும் நீ..
எனது மொழியும் நீ.. ஒலியும் நீ..
எனது இறைவனும் நீ.. இறை நம்பிக்கையும் நீ..
எனது ஆன்மா நீ..
எனது எல்லாமுமாக நீ.. உன்னை என்னுள் வைத்து காதலிப்பவனாக... நான்..
- வெள்ளைத்தமிழன்
தொடரும்..